தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த 14 வயது சிறுமியும், துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனும் சமூக வலைதளம் மூலம் ஆறு மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த இருதயராஜ் (55) என்பவர், உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சிறுவர்களிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சிறுவன், அச்சிறுமியை நேற்று (ஜூலை 20) அழைந்துவந்து இருதயராஜிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், இருதயராஜ் சிறுமியை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அவரிடமிருந்து தப்பி வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல்கொடுத்தனர்.
சிறுமி நடந்ததை காவல் துறையினரிடம் கூறியதையடுத்து, கரிவலம்வந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சித்ரகலா தலைமையிலான காவல் துறையினர் இருதயராஜ்ஜையும் அச்சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவர் போக்சோவில் கைது! - போக்சோ சட்டத்தின்கீழ் கைது
தென்காசி: சங்கரன்கோவில் அருகே சிறுமியைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தது தொடர்பாக சிறுவன் உள்பட இருவரக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர்.
![சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: சிறுவன் உள்பட இருவர் போக்சோவில் கைது! கைதான இருதயராஜ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:13:21:1595313801-tn-tki-05-pocso-act-arrest-7204942-20072020195630-2007f-1595255190-986.jpg?imwidth=3840)