தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு பொதுமக்கள் செல்ல மாவட்ட ஆட்சியர் சமீரன் கடந்த 14ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு தடை விதித்தார்.
தற்போது வெள்ளப்பெருக்கு சீரான நிலையில், அனைத்து அருவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.18) காலை முதல் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்!