ETV Bharat / state

டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது! - today latest news in tamil

Dispute at TASMAC Bar near Tenkasi: தென்காசி அருகே டாஸ்மாக் பாரில் மதுபோதையில் பணம் கொடுக்காமல் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட 3 பேரை தென்காசி காவல் துறையினர் கைது செய்தனர்.

Dispute at TASMAC Bar near Tenkasi
டாஸ்மாக் பாரில் தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 7:19 AM IST

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள யானை பாலம் அருகே பார் வசதியுடன் கூடிய அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் பாரில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 3 நபர்கள் மது போதையில் பணம் கொடுக்காமல் மது பானம் கேட்டு சப்ளையரிடம் தகராறு செய்துள்ளனர்.

மேலும், ஊழியர்களைத் தகாத வார்த்தைகளில் பேசி, அங்குள்ள மது பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் சேர்களை உடைத்தும் அங்கிருந்த நபர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கிருந்த சிலர், இந்த சம்பவம் குறித்து தென்காசி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தென்காசி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் பிற போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அவ்வாறு விசாரணை மேற்கொண்டதில், தென்காசி அருகே உள்ள நன்னகரத்தைச் சேர்ந்த செண்பகராஜ் என்ற பூராஜ் (45), மேலகரம் ஸ்டேட் பேங்க் காலணி முதல் தெருவைச் சேர்ந்த ராஜ் என்ற அந்தோணி ராஜ் (21), வினோத் என்ற முபாரக் (32) ஆகிய மூவரும்தான் தகராறில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் செண்பராஜ் என்ற பூராஜ் மீது சாம்பவர் வடகரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடைகால் டாஸ்மாக் சூப்பர்வைசரை வெட்டி கொலை செய்தது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அப்துல் கலாம் பிறந்த நாள்: 25 அடி உயர விண்கலம், அப்துல்கலாம் திருவுருவ சிலை அமைத்து சிறப்பு நிகழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.