ETV Bharat / state

மேக்கரை அடவி நயினார் கோயில் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு! - விவசாயிகள் மகிழ்ச்சி

தென்காசி: மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேக்கரை அடவி நயினார் கோயில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The water level of Maker Adavi Nainar Kovil Dam has risen by 12 feet in one day!

author img

By

Published : Aug 8, 2020, 3:37 AM IST

தென்காசி மாவட்டம் மேக்கரை அடவி நயினார் கோவில் நீர்தேக்கம் 132.20 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் நேரடியாக 2417 ஏக்கர் பாசன வசதியும், மறைமுகமாக சுமார் 5000 ஏக்கர் பாசன வசதியும் பயன்பெற்று வருகிறது .

இந்த அணையின் மூலம் வடகரை, மேக்கரை, பண்பொழ, அச்சன்புதூர், சீவனல்லூர், ஆய்க்குடி, சாம்பவர் வடகரை என சுமார் 28 கிராமஙகள் பயனடைந்து வருகின்றன. தற்போது இரண்டுமாதஙகளாக 60 அடியிலேயே இருந்த நீர்மட்டம், கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக சுமார் 52 அடி உயர்ந்துள்ளது.

குறிப்பாக நேற்று 45 மிமீ மழையும், நேற்று 90 மிமீ மழையும் பெய்துள்ளதன் மூலம், நேற்றுவரை 100 அடியை எட்டியிருந்த அணையின் நீர்மட்டம், நேற்று ஒரே நாளில் 12 அடி உயர்ந்து, 112 அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.