ETV Bharat / state

தென்காசியில் திருமணமான 2 நாளில் மணப்பெண் தற்கொலை - Sankarankoil City Police

தென்காசியில் திருமணமான இரண்டே நாளில் மணப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 11, 2022, 10:21 AM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி கார்த்திக் ராஜா என்பவரும் அதே பகுதியை சேர்ந்த கௌசல்யாவு (21) என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதற்கு கௌசல்யா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறி (செப்.8) ஆம் தேதி கார்த்திக் ராஜாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கார்த்திக் ராஜா வீட்டிற்கு இருவரும் சென்று வாழ்க்கையை தொடங்கினர். அதன்பின் மறுநாள் (செப்.9) கார்த்திக் ராஜாவின் வேலை காரணமாக வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன்பின் வீடு உள்பக்கம் பூட்டியபடியே கிடந்துள்ளது.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக

நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி கௌசல்யாவை அழைத்துள்ளனர். அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கௌசல்யா தூக்கிட்டவாறு கிடந்தார். அதன்பின் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் கௌசல்யா ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அறிந்த சங்கரன்கோவில் நகர் போலீசார் கௌசல்யாவின் உடல் மீட்டு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அவரது கணவர் கார்த்திக் ராஜாவிடம் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: படம் பார்க்க வந்தவரை அனுமதிக்காத திரையரங்கிற்கு ரூ.5000 அபராதம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.