ETV Bharat / state

பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...! - மோடி பேனர் கிழிப்பு

சங்கரன்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்த தின விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரத்ததான முகாமிற்காக வைக்கப்பட்ட பேனர்களை கிழித்த இஸ்லாமிய இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியுள்ளது.

பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!

author img

By

Published : Sep 17, 2022, 4:39 PM IST

தென்காசி: சங்கரன்கோவிலில் காந்திநகர் பகுதியில் பாஜகவின் சார்பில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமிற்காக காந்திநகர் மண்டபம் பகுதியில் இருந்து கழுகுமலை சாலை வரை பாஜகவின் கொடி கம்பங்களும் பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

கழுகுமலைச்சாலையில் பள்ளிவாசலுக்கு அருகில் பேனர் வைக்கப்பட்டிருந்ததால் அதற்கு ஆட்சேபனை தெரிவித்த இஸ்லாமிய இளைஞர்கள் அதனை அகற்றுமாறு கூறிவந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பகுதியில் திரண்ட இஸ்லாமிய இளைஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படம் பொறித்து வைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் கொடி கம்பங்களை கிழித்து எறிந்தனர்.

பள்ளிவாசலுக்கு அருகே வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு...!

இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது. மேலும், பேனர்களை அகற்றிய இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்ய முயன்ற காவல்துறையினருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேனர்களை கிழித்ததாக கூறப்படும் இளைஞர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அந்தப் பகுதியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: "ராசா போன்றவர்களை பேசவிட்டு ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறாரோ?" - டிடிவி தினகரன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.