ETV Bharat / state

காவலருக்கு அரிவாள் வெட்டு: குற்றவாளி தப்பியோட்டம்! - Scythe cut

தென்காசி: காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய குற்றவாளியைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவலருக்கு அரிவாள் வெட்டு  அரிவாள் வெட்டு  The culprit who cut the police with a scythe escaped  The criminal who cut the police with a scythe escaped in thenkasi  Scythe cut  Scythe cut to police
The culprit who cut the police with a scythe escaped
author img

By

Published : Dec 12, 2020, 2:13 PM IST

தென்காசி மாவட்டம், ஊர்மேனி அழகியான்புரத்தைச் சேர்ந்தவர் பால்தினகரன்(30). இவர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், குற்றவாளியான பால்தினகரனை காவல் துறையினர் பிடிக்கச் சென்றனர்.

அப்போது, சக்திவேல் என்ற காவலரை பால்தினகரன் வீட்டிலிருந்த அரிவாளால் தலைப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதில், படுகாயமடைந்த சக்திவேலை சக காவலர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலரை அரிவாளால் வெட்டியச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞருக்கு அரிவாள் வெட்டு: காதல் விவகாரமா? போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.