ETV Bharat / state

புளியங்குடி இளைஞர் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு - எம்.எல்.ஏ முன்னிலையில் நல்லடக்கம்! - tankasi collector

தென்காசி மாவட்டம், புளியங்குடி இளைஞர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி 10 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையினையடுத்து உடலை பெற்றுக் கொண்டனர்.

thangasamy
இளைஞர் தங்கசாமி
author img

By

Published : Jun 24, 2023, 5:43 PM IST

தங்கசாமி

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர், தங்கசாமி. இவர் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்றதாக கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று புளியங்குடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்பு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஜூன் 14ஆம் தேதியன்று உடல் நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்பு உயிரிழந்ததாகவும் காவல் துறையின் தரப்பில் கூறப்படுகிறது.

பின்பு அவரது பெற்றோருக்குத் தகவல் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்த பெற்றோர் உடனடியாக புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, சாலையின் குறுக்கே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கே போக்குவரத்து 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே நாளில் சகோதரி, சகோதரனை இழந்த நடிகர் போஸ் வெங்கட்... சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!

இதை அறிந்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரின் பேச்சுவார்த்தைக்கு இணங்க போராட்டத்தைக் கைவிட்டனர். அதன் பின்பு மறுநாள் காவல் துறையினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தன்னுடைய மகனின் இறப்பிற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

மேலும், தனது மகன் போலீஸாரால் அடிக்கப்பட்டு இருக்கிறார் என தங்கசாமியின் பெற்றோரால் கூறப்பட்டதை அடுத்து சுமார் ஒன்பது நாட்களுக்கும் மேலாக தனது மகனின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல அரசியல்வாதிகள் அவர்களிடம் பேசியும், அவர்களது மகனின் இறப்பிற்கு காவல் துறையே காரணம் என்று கூறி அவர்கள் தொடர்ந்து உடலை வாங்க மறுத்தனர். பின்பு வந்த தங்கசாமியின் உடல் பரிசோதனை அறிக்கையில், அவரது மகனின் உடலில் ஏழு இடங்களில் காயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவ நல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், புளியங்குடி நகர் மன்ற தலைவர், அவைத்தலைவர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் உறுதி மொழி அளித்தனர். அதனை அடுத்து சுமார் பத்து நாட்கள் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு தங்கசாமி உடலை அவரது பெற்றோர் பெற்று, எம்.எல்.ஏ முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.