ETV Bharat / state

கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: வருவாய் கோட்ட அலுவலகத்தில் பரபரப்பு - Tenkasi Vao officials sudden protest in revenue office

தென்காசி: கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தக்கோரி 50-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் கோட்ட அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tenkasi Vao officials sudden protest in revenue office

author img

By

Published : Oct 6, 2020, 10:08 PM IST

தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவடைந்து ஒரு மாதமாகியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை எனக்கூறி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் சேர்மப்பாண்டியன் கூறுகையில், “மாவட்டத்தில் ஜமாபந்தி நிறைவுற்ற நிலையில் அரசாணையின்படி வருடந்தோறும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தென்காசி மாவட்டத்தில் ஜமாபந்தி முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கும் வரை காத்திருக்கப்போகிறோம்” என்றார். கோட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.