தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சாலையில் முத்துமாரி என்பவர் சிற்ப கலைக்கூடம் நடத்தி வருகிறார்.
அவர் கருங்கல்லில் கோயில்களுக்கான அழகிய கலை நயமுடைய உருவச் சிலைகள் செய்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
அதனால் அவர் புதிய முயற்சியாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு புலக்கத்திலிருந்த இசை கருவிகள் செதுக்கலை தற்போது கொண்டுவர எண்ணினார்.
அது தொழிலை முன்னேற்றவும், சிற்பிகளை ஊக்குவிக்கும் விதமாக அமையும் எனக் கூறி, முதல் முயற்சியாக ஒரே கல்லில் நாதஸ்வரம் செதுக்கினார்.
1 அடி நீளமும் அரை அடி அகலமும் கொண்ட கருங்கல்லை கொண்டு 7 நாள்களாக கடின முயற்சியில் செதுக்கி நாதஸ்வர இசை கருவியை செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அதனை தனது நண்பர் நாதஸ்வர கலைஞர் ஒருவரை அழைத்து வாசிக்க வைத்து வழக்கமான நாதஸ்வரத்தை போல இசைக்கவும் வைத்து அசத்தியுள்ளார். அவரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட பயிற்சிப் பள்ளி அமைக்கக் கோரிய வழக்கு!