ETV Bharat / state

’பயப்படாதீங்க உங்க வண்டிய பிடுங்க மாட்டோம்’ - காவல் துறை மடக்கிப் பிடித்ததால் பதறிய வாகன ஓட்டிகள்

தென்காசி: சாலையில் சென்ற இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு நகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

virus
virus
author img

By

Published : May 3, 2020, 12:14 PM IST

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 38 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தென்காசி மாவட்டம் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு இடம்பெயர்ந்து உள்ளது.

இது தென்காசி மாவட்ட மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்திருந்தாலும், மேலும் வைரஸ் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை கையாண்டுவருகிறது.

இந்த நிலையில் தென்காசி அருகே காவல் துறையினர் இன்று திடீரென சோதனைச்சாவடி அமைத்து அவ்வழியாகச் செல்லும் அனைத்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்தனர்.

தென்காசியில் இருசக்கர வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

இதைக் கவனித்த வாகன ஓட்டிகள் தடை உத்தரவை மீறிவருவதால் வாகனங்களை காவலர்கள் பறிமுதல் செய்யப்போவதாக எண்ணி பதற்றம் அடைந்தனர்.

ஆனால் காவலர்கள், ’பயப்படாதீங்க உங்க வண்டிய பிடுங்கமாட்டோம்’ எனக்கூறி தென்காசி நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இருசக்கர வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

இதனையடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கிருமிநாசினி தெளித்த பிறகு அனைத்து வாகனங்களும் அங்கிருந்து எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'உணவுக்குக்கூட வழியின்றித் தவிக்கின்றோம்' - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத் தொழிலாளர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.