தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பங்குனி மாதம், பங்குனி உத்திரம் திருவிழா கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக சாஸ்தா கோயில்கள் மற்றும் முருகன் கோயில்களில் பொதுமக்கள் குடும்பமாக சென்று பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.
தென்காசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தோரணமலை ஸ்ரீ முருகன் கோயில் உள்பட பல்வேறு முக்கிய கோயில்களிலும், ஆங்காங்கே குளக்கரையில் உள்ள சாஸ்தா கோயில்களிலும் பங்குனி உத்திர திருவிழாவை மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
![களையிழந்த பங்குனி உத்திரம் திருவிழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-02-tenkasi-koiltempleslocked-vis-7205101_06042020165203_0604f_01927_499.jpg)
இந்த நிலையில் கரோனா பீதியால் பங்குனி உத்திரம் திருவிழாவை மக்கள் கொண்டாட முடியாமல் போனது. இதனால் கோயில்கள் களையிழந்து காணப்பட்டன.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!