ETV Bharat / state

கனமழையால் சாயும் நிலையில் மரம்; பொதுமக்கள் அச்சம்! - Kadayam tree issue

தென்காசி: கடையம் பகுதியில் கனமழை காரணமாக, மரம் ஒன்று சாயும் நிலையில் கீழே விழும் அபாயத்தில் உள்ளது.

tree
tree
author img

By

Published : Aug 10, 2020, 8:28 AM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ரவணசமுத்திரத்தில் ரயில்வே கேட் அருகே ரயில்வே இடத்திலுள்ள ஆலமரத்தின் ஒரு பகுதி சிலதினங்கள் முன்பு மழை, காற்றால் சாய்ந்து விழுந்துள்ளது.

மரத்தின் மீதமுள்ள பகுதிகள் எந்த நேரத்திலும் ஒடிந்து கீழே விழுந்து உயிர்சேதம் ஏற்படும் வகையில் அபாயநிலையில் உள்ளது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது, எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல கிராமங்களை இணைக்கும் பிரதமான போக்குவரத்து சந்திப்பில், அபாய நிலையில் இந்த ஆலமரம் இருப்பதால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் இதனை அகற்ற வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் - 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.