ETV Bharat / state

வனத்துறை பிடியில் உயிரிழந்த விவசாயி உடல் 8 நாள் போராட்டத்துக்கு பின் அடக்கம்!

தென்காசி: வனத்துறையினர் கைது செய்தபோது உயிரிழந்த விவசாயி உடல் எட்டு நாள் போராட்டத்துக்கு பிறகு இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

வனத்துறை பிடியில் உயிரிழந்த விவசாயி உடல் 8 நாள் போராட்டத்துக்கு அடக்கம்!

author img

By

Published : Jul 31, 2020, 7:23 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக கடந்த 22ஆம் தேதி வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மர்ம முறையில் உயிரிழந்தார் .

வனத்துறையினர் தாக்கியதால் தான் அணைக்கரைமுத்து இறந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்து கடந்த 8 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அணைக்கரைமுத்துவின் மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கில், உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும்படி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மறு பிரேத பரிசோதனை நெல்லை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் செல்வமுருகன், தடயவியல்துறை இணைப் பேராசிரியர் பிரசன்னா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி தடயவியல்துறை தலைவர் சுடலைமுத்து ஆகியோர் வீடியோ பதிவுடன் உடற்கூறு ஆய்வு செய்தனர்.

அம்பாசமுத்திரம் நீதிமன்ற நடுவர் கார்த்திகேயனும் உடன் இருந்தார். சுமார் ஒன்றை மணிநேரம் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. பின்னர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வனத்துறை பிடியில் உயிரிழந்த விவசாயி உடல் 8 நாள் போராட்டத்துக்கு அடக்கம்!

இதையடுத்து, இங்கிருந்து பலத்த காவல் துறை பாதுகாப்புடன் உடல் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊரான வாகைக்குளத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி கூறுகையில், நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து உடலை பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...விவசாயி சந்தேக மரணம் - உடலை வாங்க குடும்பத்தினர் மறுப்பு; மறு உடற்கூறாய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.