ETV Bharat / state

நீர் இன்றி அழியும் தருவாயில் மருத்துவ குணங்கள் நிறைந்த பீர்க்கங்காய்கள் - விவசாயிகள் கலக்கம்! - இன்றைய தென்காசி மாவட்ட செய்திகள்

Health benefits of ridge gourd: உடலுக்கு நன்மை விளைவிக்கும், ஏகப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட பீர்க்கங்காய், தென்காசி அருகே அதிகளவில் பயிர் செய்யப்பட்டிருக்கும் சூழலில், நீர் இன்றி பயிர்கள் அழியும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

in tenkasi Farmers are in agony as ridge gourd crops are drying up without water
தண்ணிர் இல்லாமல் பீர்க்கங்காய் பயிர்கள் காயும் நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனை
author img

By

Published : Aug 21, 2023, 5:38 PM IST

தண்ணிர் இல்லாமல் பீர்க்கங்காய் பயிர்கள் காயும் நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனை

தென்காசி: காய்கறியை விரும்பி உண்பர்களால் கூட அதிகம் கண்டுகொள்ளப்படாத காயான பீர்க்கங்காய் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அதிகப்படியாக மகசூல் செய்யப்படுகிறது. இந்த பீர்க்கங்காய் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. அதில் மிகவும் முக்கியமானது உடல் எடை இழப்பு. உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் பீர்க்கங்காயை தவறாமல் உணவில் சேர்த்து வரலாம்.

மேலும் உங்கள் உடல் எடையை குறைத்து ஒரு ஆரோக்கியமான சருமத்தை நீங்கள் பெற விரும்பினால் அதற்கு பீர்க்கங்காய் உங்களுக்கு ஒரு நல்ல பலனை தரும். குறைந்த கலோரியை கொண்ட காயான பீர்க்கங்காய் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

வைட்டமின் சி, துத்தநாகம், இரும்பு, ரிபோஃப்ளோவின், மெக்னீசியம், தயாமின் உள்ளிட்ட அனைத்துச் சத்துகளும் இதில் உள்ளன. தோல் சம்பந்தமான அனைத்து கோளாறுகளுக்கும் பீர்க்கங்காய் நல்ல தீர்வை கொடுக்கக் கூடியது. இதன் இலைகளும் மருத்துவ குணம் உடையவை. கண்ணில் ஏற்படும் வலிகள் மற்றும் வீக்கத்திற்கு பீர்க்கங்காய் இலைகளின் சாற்றை போடுவதன் மூலம் விரைவில் குணமடையும்.

சிறுநீரக கோளாறுகளுக்கு நன்கு முற்றிய பீர்க்கங்காய் பயன்படுத்தபடுகிறது. பீர்க்கங்காயை சரிவர உணவில் எடுத்து கொள்ள அதிக படியான காய்ச்சல், சளி தொல்லை, இருமலால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரத்த சோகையில் இருந்து விடுபடுவதற்கும் பீர்க்கங்காயை சாப்பிட்டு வரலாம். பீர்க்கங்காயின் பழங்களும் நன்மை தர கூடியதே. அதை வாந்திக்கு பயன்படுத்தலாம். சுவாச கோளாறுகளுக்கும் அது அரு மருந்து.

மண்ணீரலில் ஏற்படும் புண்களை குணப்படுத்த பீர்க்கங்காயின் சாற்றை அதில் போடுவதன் மூலம் விரைவில் குணம் அடையும்.
உடலில் இருக்கும் எண்ணெய் சருமத்திற்கு இதனை பயன்படுத்த நல்லது. இதில் அடங்கி இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் அதிக அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது. இதன் விதைகள் பேதியை தடுக்கும், கபம் வெளியேற்றும், எண்ணெய் தோல் நோய்களுக்கு தடவும் மருந்தாகப் பயன்படும். வேரானது நீர் கோர்வைக்கும், மிதமான பேதிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

இதை கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளுக்கு மருந்தாக உள்ளது. இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பீர்க்கங்காயை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதி விவசாயிகள் கல்தூண்கள் நட்டு பந்தலிட்டு அதன் மீது பீர்க்கங்காய் கொடியை படறவிட்டுள்ளனர். இதனை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கவர்கிறது. மேலும் இப்பகுதியில் சில இடங்களில் பயிரிடப்பட்டுள்ள பீர்க்கங்காய் தண்ணீர் இல்லாமல் அழியும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: சாலையை கூலாக கடந்து செல்லும் சிறுத்தை புலி... வாகன ஓட்டிகள் பீதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.