ETV Bharat / state

15 கோடிக்கும் மேலான வளர்ச்சித் திட்டப் பணிகள் - தென்காசி கலெக்டர் ஆய்வு... - கோக்கோ

தென்காசி மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், விவசாயிகளின் வேளாண் உற்பத்தி முறைகள் குறித்தும் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
author img

By

Published : Mar 29, 2023, 6:45 PM IST

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் விவசாயிகளின் வேளாண் உற்பத்தி முறைகள் குறித்தும் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்டமாக சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள பனையூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சொட்டு நீர்ப் பாசன திட்டத்தை செயல்படுத்த 15 ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மையப்பகுதியில் அரசு செலவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் மற்றும் அதில் செய்ய உள்ள விவசாய முறைகள் குறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார், மாவட்ட ஆட்சியர்.

இதனைத்தொடர்ந்து, அதே பகுதியைச்சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது சாஃப்ட்வேர் இன்ஜினியர் வேலையை விட்டுவிட்டு தற்போது தனது நிலத்தில் கோக்கோ மரக்கன்றுகளை அரசு மானியத்தில் வாங்கி, கோக்கோ பழங்களை சாகுபடி செய்து, தனியார் சாக்லேட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, கோக்கோ விதைகளை தனது பண்ணை வளாகத்தில் சுத்தம் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரது, தோட்டத்தில் தேனீ வளர்ப்பு மூலம் கிடைக்கும் லாபத்தையும் தேனீ வளர்ப்பால் விவசாயத்தில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.

பின்னர், ஊர்மேலழகியான் பகுதியில் உள்ள மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தமிழக தோட்டக்கலைத்துறை மூலம் தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் 15 கோடிக்கும் மேலான வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதாவது, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் சுமார் 238 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதிலிருந்து சுமார் 171 லட்சம் பணம் எடுக்கப்பட்டு 555 பயனாளிகள் பயனடைந்துள்ளதாகவும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 105 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 51 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டு 334 பயனாளிகள் பயன் அடைந்துள்ளதாகவும், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 1,435 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 534 பயனாளிகளுக்கு 202 லட்சம் ரூபாய் செலவில் நுண்ணுயிர் பாசன அமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பண்ணாரி அம்மன் கோயிலில் விடிய விடிய நடந்த திருக்கம்பம் சாட்டுதல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.