ETV Bharat / state

பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தென்காசி கலெக்டருக்கு - கண்டித்த விவசாயிகள் - tenkasi latest news

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன தென்காசி ஆட்சியர்!

author img

By

Published : Feb 23, 2023, 3:24 PM IST

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்களை வெளியேறச் சொன்ன மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.23) விவசாயிகள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த நிலையில், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் செய்தி சேகரிக்க நின்று கொண்டிருந்த செய்தியாளர்களை கூட்டத்திலிருந்து வெளியே செல்லும்படி அம்மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் கூறினார்.

இதற்கு விவசாயிகள் சிலர், ‘இது அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட கூட்டம் இல்லை. இது விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம். எனவே, இந்தக் கூட்டத்தில் இருந்து பத்திரிகையாளர்களை ஏன் வெளியே செல்லச் சொல்கிறீர்கள்’ என மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர், ‘இந்த அரங்கத்தில் யார் அமர வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது நான்தான். நீங்கள் அல்ல’ என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ‘பத்திரிகையாளர்கள் இல்லை என்றால், நாங்கள் இந்தக் கூட்டத்தை புறக்கணிப்போம்’ என மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசு அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஏன் கூறுகிறார் என்றும்,

விவசாயிகளின் குறைகளை அரசிற்கு எடுத்துரைக்கும் பத்திரிகையாளர்களை ஏன் வெளியே செல்லச்சொல்கிறீர்கள் எனவும் தொடர்ந்து கேள்விகள் எழுப்பியும் மாவட்ட ஆட்சித் தலைவரை முற்றுகையிட்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: என்னை திமுகவினர் மிரட்டுனாங்க; அதனால் அதிக நிதி ஒதுக்குனேன் - தென்காசி ஊராட்சிக்குழு தலைவி ஓபன் டாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.