தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மதுக்கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி 42 நாள்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்தது.
![மதுபானங்கள் கொண்டு செல்லும் பணி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-03-wineshop-ready-vis-7204942_06052020154358_0605f_1588760038_692.jpg)
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 169 டாஸ்மாக் கடைகளை மாநில அரசு அறிவித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி இயக்குவதற்கு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடைகளுக்கு முன்னால் தடுப்புகள் அமைத்தல், கடைகள் முன்னால் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வட்டம் வரைதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் பார்க்க: கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை