தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் போது, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் நடப்பு ஆண்டிற்கான காலியிட மதிப்பீடு அறிக்கை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விகிதாச்சாரத்திற்கு உட்பட்டு மறுநிர்ணயம் செய்ய வேண்டும்.
பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிடப்பட வேண்டும். துணை ஆட்சியர் பட்டியலை நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இட ஒதுக்கீட்டிற்கு உட்பட்டு விரைவாக வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நுற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 26 வயது காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி