இந்திய தேர்தல் ஆணையம் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளது. தேர்தல் நெருங்க உள்ள காரணத்தினால் தமிழக - கேரௗ அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாஷர், காவல் கண்காணிப்பாளர் ரவி, இரு மாநில வருவாய்த் துறை, வனத்துறை, சிறப்பு குற்றத் தடுப்பு பிரிவு, அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இரு மாநில எல்லையோரம் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் பதிவு செய்வது, சோதனை சாவடிகளை கண்காணிப்பது, தகவல் பரிமாற்றம், குற்றச் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.