இந்தியா சந்தித்துள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுவருகிறது. அதற்காக பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி ரயில்வே, நிதி நிறுவனம் உள்ளிட்டவற்றை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் முடிவு செய்திருந்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தென்காசி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன்பு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கைவிட வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை எழுப்பி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.