ETV Bharat / state

கடையநல்லூர் அருகில் தோட்டத்தில் மனித எலும்புக்கூடு.. காவல் துறையினர் விசாரணை! - தென்காசி செய்திகள்

கடையநல்லூர் அருகே தனி நபர் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இடுப்புக்கீழ் உள்ள மனித எலும்புக்கூடு பாகம் கிடந்ததைத் தொடர்ந்து, அதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

human bone  human bone found near thenkasi  Suspicious human bone  Suspicious human bone in kadayanallur  thenkasi news  thenkasi latest news  தென்காசியில் மனித எலும்பு கூடு கண்டெடுப்பு  மனித எலும்பு  கடையநல்லூர் அருகே மனித எலும்பு கூடு கண்டெடுப்பு  தென்காசி செய்திகள்  இன்றைய செய்திகள்
தோட்டத்தில் மனித எலும்பு கூடு
author img

By

Published : Jul 15, 2022, 6:09 PM IST

தென்காசி: கடையநல்லூர் மங்களாபுரம் அருகே உள்ள தனிநபர் ஒருவருக்குச்சொந்தமான தோட்டத்தில் மனித உடலின் இடுப்புப்பகுதிக்குக் கீழ் உள்ள எலும்புக்கூடு ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அதனைக் கைப்பற்றி அந்த மனித எலும்புக்கூடு யாருடையது என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து எலும்புக்கூட்டின் உடல் பாகங்கள், துண்டுகள் எதுவும் அப்பகுதியில் உள்ளனவா என்று காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், அதே பகுதியில் கை ஒன்று மட்டும் கிடந்துள்ளது. இதை ஏற்கெனவே காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது உடலின் பாதி எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

கடையநல்லூர் பகுதியில் இதுவரை காணாமல் போனவர் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் கடையநல்லூர் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் கை மற்றும் உடல் இடுப்புப்பகுதிகளின் எலும்புக்கூடு கிடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கை ஒரு பக்கம்; இடுப்புப்பகுதி ஒரு பக்கம் என எலும்புக்கூடு கிடந்துள்ளதால் காவல் துறைக்கு துப்புக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய முறையில் மனித உடலின் பாகங்கள் கிடந்துள்ளதால் காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாணவனுக்குப் பாலியல் தொல்லை.. விடுதி வார்டன் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.