ETV Bharat / state

சுரண்டை டிஎம்பி வங்கியில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக பணம், நகைகள் தப்பியது! - டிஎம்பி

சுரண்டை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக லட்சக்கணக்கில் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் தப்பியது.

fire accident
சுரண்டை டிஎம்பி வங்கியில் தீ விபத்து
author img

By

Published : Jul 14, 2023, 11:02 AM IST

தென்காசி: சுரண்டை - சங்கரன்கோவில் ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் நேற்று (ஜுலை 13ஆம் தேதி) இரவு சுமார் 9.30 மணி அளவில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. வங்கியில் தீ விபத்து ஏற்பட்ட கரும் புகை வந்து உடனே அலாரம் அடிக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அலாரம் அடித்ததைக் கண்டு உடனடியாக சுதாரித்த வாட்ச்மேன் மற்றும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சுரண்டை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன், வீரர்கள் சாமி, குமார், விவேகானந்தர், உதய பிரகாஷ் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலாளர் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் சில முக்கியமான டாக்குமென்ட்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வங்கியில் சுரண்டை சேர்ந்த மரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த வங்கியில் தீப்பிடித்து எரிந்ததில் கம்ப்யூட்டர் உட்பட சிசிடிவி கேமரா என பல பொருள்கள் எரிந்து நாசமாயின. சில முக்கியமான ஆவணங்கள் எதுவும் எரியவில்லை என முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

மேலும் இரவு நேரத்தில் இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தீ விபத்தினால் அருகில் உள்ள கடைகளுக்கும் எந்த விதமான பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து உடனடியாக, தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பல லட்சம் மதிப்பு உள்ள பணம் மற்றும் நகைகள், கடன்களுக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த முக்கிய ஒரிஜினல் ஆவணங்கள் பத்திரப்படுத்தப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் குறித்து சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், எஸ்ஐ அலெக்ஸ் மேனன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் இரவு நேரத்தில் மின்கசிவினால் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த விபத்து குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கலைஞர் நூலக திறப்பு விழா: ஊர்ப்புற நூலகர்களுக்கு விடியல் கிட்டுமா? - ஒரு சிறப்புத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.