ETV Bharat / state

பல அரிய வாய்ப்புகளை இழந்து வருகிறோம்.. - தென்காசி கலெக்டர் ஆபிஸில் பள்ளி மாணவர்கள் புகார் - ncc student in tenkasi

பள்ளியில் தேசிய மாணவர் படை நிறுத்தப்பட்டதால் பல அறிய வாய்ப்புகளை இழந்து வருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் புகார்

author img

By

Published : Jan 9, 2023, 4:09 PM IST

Updated : Jan 9, 2023, 4:46 PM IST

தென்காசி: வீரசிகாமணி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 60 ஆண்டு காலமாக தேசிய மாணவர் படை(NCC) செயல்பட்டு வருகிறது. தற்போது தேசிய மாணவர் படையை, எடுத்து நடத்தி வந்த ஆசிரியர்கள் ஓய்வுபெற்றதன் காரணமாக, அப்பள்ளியில் தேசிய மாணவர் படை செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தேசிய மாணவர் படை செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் “தேசிய மாணவர் படை செயல்பாடுகளின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் ராணுவம், காவல் துறை உள்ளிட்டப் பணிகளில் சேர்வதற்கு ஏதுவாக இருந்து வந்தது. தற்போது இந்த மாணவர் படை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால் தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பல அரிய வாய்ப்புகளை இழந்து வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: நாதம் 108 என்ற பெயரில் கந்தசஷ்டி கவசம்: மனமுருகி பாடிய மாணவர்கள்

Last Updated : Jan 9, 2023, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.