தென்காசி: கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி காசி மேஜர்புரம் செல்லும் வழியில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று (மார்ச் 11) காலை முதல் மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குள்ள மாணவ மாணவிகள் கல்லூரியின் வேலை நேரத்தை பழைய (03.30) நேரப்படி மாற்றவேண்டும் காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்துகள் (மூன்று பேருந்துகள்) கல்லூரிக்கு வருவதை உறுதி செய்யவேண்டும்,
கல்லூரியில் மாணவர்கள் குறைகளை கேட்க மாணவர் சங்கம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், கல்லூரியில் சிற்றுண்டி (கேன்டீன்) அமைக்க வேண்டும், பேராசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியிருத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "சர்வாதிகாரி ஸ்டாலின் ஒழிக"... விடுதலைக்குப்பின் ஜெயக்குமார்...