ETV Bharat / state

'கல்லையும் கடவுளாக்கும் கற்சிற்ப கலைஞர்களின் கதை' - ஊரடங்கில் கற்சிற்ப கலைஞர்கள்

தென்சாசி: ஊரடங்கு காரணமாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதாலும், அதிகப்படியான வரி காரணமாகவும் உடைந்து போயிருக்கும் கற்களுக்கு உயிர் வடிவம் கொடுக்கும் கற்சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கல்லையும் கடவுளாக்கும் கற்சிற்ப கலைஞர்களின் கதை

author img

By

Published : Jul 31, 2020, 2:59 PM IST

கற்களுக்கு கலைவடிவம், உயிரோட்டம் அளிப்பவர்கள் கற்சிற்ப கலைஞர்கள். கற்சிற்பங்களை வடிவமைப்பதில் தமிழர்களின் கலைத்திறன் தனிச்சிறப்புடையது. அதற்கு எடுகாட்டாக தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. கண்ணால் காணும் உருவங்களை கல்லில் செதுக்கி உயிர்வடிம் அளிக்கும் சிற்பிகளும் பிரம்மாக்களே.

கோயிலின் கோபுரம், கதவுகள், ஆபரணங்கள் அனைத்தும் தங்கம், வெள்ளி என செய்யப்பட்டிருந்தாலும் சாமி சிலைகள் பெரும்பாலும் கற்களில்தான் உள்ளன. அதற்கு காரணம் உண்டு, ஏனென்றால் கல்லில் வேண்டாதவை நீக்கப்பட்டுவிடுவதால் அது பரிசுத்தமடைகிறது. அப்படி வைக்கப்பட்ட கடவுள்தான் மனதனில் உள்ள வேண்டாதவையான பேராசை, பொறாமை உள்ளிட்டவையை நீக்குவார் என்பது முன்னோர்களின் கருத்து.

அப்படி கல் கலையாகவும், உருவமாகவும், கடவுளாகவும் மாற்றும் சிற்பக் கலைஞர்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் கற்சிற்பக் கலைக்கூடம் அமைந்துள்ளது. அங்கு தலைமுறை தலைமுறையாக 20க்கும் மேற்பட்ட கற்சிற்பிகள் பணிபுரிந்துவருகின்றனர். இதுவரை 60க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சிலைகள், கோபுரங்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ளனர்.

கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ராட்சத கற்களை வாங்கி அதிலிருந்து சுற்றுவட்டாரப் பகுதி வாடிக்கையாளர்களுக்கு சிலைகளை செதுக்கி கொடுத்துவருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கரோனா ஊரடங்கு அவர்களில் வாழ்வாதாரத்து வெகுவாக பாதித்துவிட்டது. கோயில்களிலிருந்து கிடைக்ககூடிய ஆர்டர்கள் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டன. அதனால் அனைவருக்கும் வேலை கிடைப்பதில்லை. அப்படி கிடைத்தாலும் சொற்ப நபர்களுக்கும் வாரத்தில் மூன்று நாள்கள்தான் வேலை கிடைக்கிறது.

இதுகுறித்து கற்சிற்ப கலைஞர்கள் கூறுகையில், "கரோனா ஊரடங்கால் வேலை மந்தம் அடைந்துவிட்டது. ஏற்கனவே எங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கோயிலுக்கு வழங்கும் சிலைகளுக்கு 18% விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கிறது. அவ்வாறு இருக்கையில் கரோனா ஊரடங்கு மேலும் சிரமத்தை அளித்துவிட்டது. பல்லாயிரக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

அதனால் ஒவ்வொரு கற்சிற்பியின் குடும்பமும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளது. வாரம் மூன்று நாள்கள் வேலை பார்த்து எவ்வாறு குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியும். கரோனா காலத்தில் வேலையில்லாததால் நாங்கள் கல்லில் கல்லில் நாதஸ்வரம், சங்கு, கற்சங்கலி உள்ளிட்டவைகள் செய்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறோம். ஏற்கனவே செய்து வைத்திருக்கும் சிலைகளை கூட வாங்க ஆளில்லை. கோயிகள் திறக்கப்பட்டால்தான் எங்களுக்கு விடிவு பிறக்கலாம்.

கல்லையும் கடவுளாக்கும் கற்சிற்ப கலைஞர்களின் கதை

எனவே கற்சிற்ப கலைஞர்களுக்கான ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக அல்ல, பாதியாக குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர். பாறைகளை செதுக்கி உயிர் கொடுக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உயிர் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: கல்லில் கலைவண்ணம் கண்ட கல் சிற்பத் தொழிலாளர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.