ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 குற்றவாளிகள் தென்காசியில் கைது

பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த 6 பேரை தென்காசி காவல் துறையினர் கைது செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

author img

By

Published : Oct 4, 2022, 12:14 PM IST

Etv Bharat
Etv Bharat

தென்காசி: கடையநல்லூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் வீடொன்றில் தங்கியிருந்த குற்றப்பின்னணி கொண்ட 6 பேரை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அடங்கிய போலீசார் நேற்று (அக்.3) கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கடையநல்லூர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பருத்திவிலை தெருவில் சில நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சமுற்றதாகவும், கிடைத்த ரகசியத்தகவலின்படி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜின் உத்தரவின்பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பொன்னரசு, அசோக் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், விஜயகுமார் மற்றும் காவலர்கள் பருத்திவிலை தெருவில் உள்ள வீடுகளை சோதனை செய்ததில் சரோஜா என்பவரது வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது மாடியில் உள்ள ஒரு வீட்டில் பலமுறை கதவைத் தட்டியும் திறக்காத காரணத்தால், சந்தேகம் அடைந்து சட்டவழி முறைகளைப் பின்பற்றி, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமார் 6 நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் மேற்குறிப்பிடும் நபர்களை விசாரணை செய்ததில் சேரன்மகாதேவி சங்கன்திரடைச் சேர்ந்த முப்புடாதி(எ)ஆறு (27), நெட்டூர் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் சுரேஷ் கண்ணன்(எ)நெட்டூர் கண்ணன்,

மேலசெவல் பகுதியைச்சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் லட்சுமணகாந்தன்(எ)கருப்பசாமி, ஊத்துமலை அம்மன்கோயில் தெருவைச்சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் மாரிமுத்து, அய்யனார்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த உக்கிரமசிங்கம் என்பவரின் மகன்களான சூர்யா மற்றும் சத்யா என்றும், மேற்குறிப்பிடும் நபர்கள் குற்றம் செய்யும் நோக்கத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.

எனவே, அந்த ஆறு நபர்கள் மீதும் கடையநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்து விசாரணை செய்ததில் முப்புடாதி(எ)ஆறு என்பவருக்கு நெல்லை, தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி என ஆயுதத் தடைச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குற்றப் பின்னணியுடைய 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

இதேபோல, சுரேஷ் கண்ணன்(எ)நெட்டூர் கண்ணன் என்பவருக்கு நெல்லை, தென்காசி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி என ஆயுதத்தடை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உட்பட 27 வழக்குகளும், லட்சுமணகாந்தன் என்பவருக்கு கொலை, கொலை முயற்சி உட்பட 15 வழக்குகளும், மாரிமுத்து என்பவருக்கு கொலை, திருட்டு, கஞ்சா உட்பட 10 வழக்குகளும், சூர்யா என்பவருக்கு கொலை முயற்சி உட்பட 2 வழக்குகளும், சத்யா என்பவருக்கு கொலை, கொலை முயற்சி உட்பட 9 வழக்குகளும் நிலுவையில் உள்ளன எனத் தெரியவந்தது. மேலும், இது சம்பந்தமாக கடையநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த நபர்களை காவல் துறையினர் கைது செய்ததை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்கள் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் 93856 78039 என்ற எண்ணின் வாயிலாக தெரிவிக்குமாறு தென்காசி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடியோ: பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக திருடப்பட்ட இருசக்கர வாகனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.