ETV Bharat / state

சாதியை பின்பற்றுவது தண்டைக்குரிய குற்றம் என மாணவர்கள் உணர வேண்டும் - பிரின்ஸ் கஜேந்திர பாபு - சாதி ஒழிப்பு

SPCSS conference in Tenkasi: மாணவர்கள் மனதில் சாதிய உணர்வை விதைக்கும் சக்திகளை கண்டறிந்து, அவற்றை களைவது பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பு என பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாரளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 12:33 PM IST

Updated : Jan 7, 2024, 12:57 PM IST

பிரின்ஸ் கஜேந்திர பாபு அளித்த பேட்டி

தென்காசி: பொது பள்ளிகளுக்கான மாநில மேடை சார்பில் 'சாதி எனும் தாழ்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி' என்ற தலைப்பில் கல்வி கருத்தரங்கம், மேலகரம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றனர். மேலும், இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் ரத்தின சபாபதி, முனைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

மேலும், ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் சாதி ஒழிப்பிற்கான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து 'சாதி ஒழிப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பார்வையில்' என்ற நூல் வெளியிடப்பட்டது. குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் சாதிய ரீதியான உணர்வு மற்றும் சாதிய வன்மம் மேலோங்க காரணம் என்ன என்பது குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

மேலும், இந்த கருத்தரங்கில் பங்கேற்ற பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சாதி மனித குலத்தின் அவமானம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் சாதிய உணர்வும், வன்மமும் அதிக அளவில் காணப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. பாகுபாடு உள்ள சமூகத்தில் இருந்து, பள்ளிக்கூடத்தில் பயில வரும் குழந்தை, தனது படிப்பை முடித்து வெளியே செல்லும்போது பாகுபாடை களைவதற்கான தெளிவே பள்ளிக் கல்வியின் அடிப்படை நோக்கம்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி, தீண்டாமையின் விளைவாக தகுதி இழப்பு ஏற்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்றால், சாதியைப் பின்பற்றி நடப்பது தண்டனைக்குரிய குற்றம் என்னும் புரிதல் மாணவர்கள் மத்தியில் பள்ளிப் படிப்பு மூலமாக, செயல்பாட்டின் மூலமாக உணர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறையிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "சாதி என்பது பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கை என்பதை மாணவர்கள், அவர்களின் பெற்றோர், பள்ளிக் கல்வித்துறை என அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, எந்த பெற்றோரும் தங்களின் குழந்தைகள் சாதிய வன்மத்துடன் இருக்க வேண்டும் என்பதை விரும்புவதில்லை.

அவ்வாறு இருக்கும்போது, பெற்றோரை மீறி மாணவர்களின் மனதில் சாதிய வன்மத்தை உண்டாக்கும் சக்தியைக் கண்டுபிடித்து, அதை களைக்கும் பொறுப்பு தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு உள்ளது. அதனை வலியுறுத்திதான் இந்த கருத்தரங்கம் நடை பெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூரில் கொலை மிரட்டல் விடும் மின்சாரத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஐஜியிடம் மனு!

Last Updated : Jan 7, 2024, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.