தென்காசி: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ளது . இந்த மருத்துவமனைக்குச் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (ஆகஸ்ட் 27) தைராய்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர் சங்கரன்கோவில் அரசு மருத்துவர்கள்.
சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும்பாலான பொதுமக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு வருவது வழக்கம் மேலும், சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் பொருத்த அளவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகள் அதிகமாகவே உள்ளன. இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்களும் அதிகப்படியான வருமானமின்றி விவசாய தொழிலையே நம்பி வாழக்கூடிய மக்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் திருநெல்வேலி தலைமை மருத்துவமனைக்கு ஈடு இணையாக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் பல சிகிச்சைகள் செய்து வெற்றி சாதனை படைத்துள்ளனர். மேலும் இங்கு மேற்கொள்ளப்படும் சிறப்பு அறுவை சிகிச்சைகள் குறித்து தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகர், மருத்துவர்கள் ஜப்சீர், செல்வ சரவணன் ,ஜெயபாஸ்கர், ராணி ஸ்ரீகுமார் ,அர்ச்சனா, பாலசுப்ரமணியன் ஆகிய மருத்துவ குழுவினர் தெரிவித்ததாவது.
“சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தைராய்டு, குடலிறக்கம் , கடுமையான எலும்பு முறிவு, மார்பக புற்றுநோய் கட்டி அகற்றல், ஹீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ அறுவைசிகிச்சைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Call to Action Programme மூலம் தூய்மை நகரமாக மாறும் தலைநகரம்.. சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
டான்சில் அறுவை சிகிச்சை என்பது மாவட்ட தலைமை மருத்துவமனை அல்லது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக தைராய்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது முழு குணமடைந்து உள்ளனர். கடந்த மாதம் மட்டும் 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் பகுதி மக்கள் அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளையும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் செய்து கொள்ளலாம். இன்னும் மூன்று வாரங்களில் சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்ட உள்ளது. எனவே சிறப்பாகச் செயல்படும் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்தி கட்டணம் இல்லாமல் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்” என மருத்துவர் குழு தெரிவித்தனர்.
தனியார் மற்றும் நகர புற தலைமை அரசு மருத்துவமனைகள் செய்யும் அறுவை சிகிச்சைகளை தற்போது கிராமப் புற மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய வகையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பல அறுவை சிகிச்சைகளை நடத்தி வருவதும் பல வசதிகளைக் கொண்டுவருவதும் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் 4வயது சிறுவன் நீச்சல் குளத்தில் முழ்கி உயிரிழப்பு... முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!