தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சியின் 18ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பூமாரி, கல் மண்டபம் அருகில் மாநில நெடுஞ்சாலைத்துறை சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்தி வந்ததாக கூறப்பட்டுவந்தது. இதனால் போக்குவரத்திற்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் மிகுந்த சிரமம் ஏற்பட்டதால் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அப்பகுதி சமூக ஆர்வலர் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடையை அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர். கடையை அகற்ற முயன்ற போது நெடுஞ்சாலை துறையினருக்கும் கவுன்சிலர் பூமாரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இருப்பினும் கடை முற்றிலும் அகற்றப்பட்டது.
இதையும் படிங்க: 'மெல்லிசை செல்வி' - மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிக்குத் தேர்வாகிய தென்காசி மாணவி!