ETV Bharat / state

தென்காசி: சிறையில் இளைஞர் உயிரிழப்பு.. போலீசார் அடித்ததால் மரணம் என உறவினர்கள் மறியல்! - tenkasi lockup death

தென்காசியில் காவல் துறையினர் தாக்கியதால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்களின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசியில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

author img

By

Published : Jun 15, 2023, 7:40 AM IST

இளைஞர் தங்கசாமியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி

தென்காசி: கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடியில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாடசாமி என்பவரது மகனான தங்கசாமி (26) என்பவரும், அவரது பாட்டி முப்பிலி மாடசாமி என்பவரும் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களை புளியங்குடி காவல் உதவி ஆய்வாளர் பரமசிவன் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் தங்கசாமி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், தங்கசாமியை காவல் துறையினர் கடுமையாக தாக்கி சிறையில் அடைத்ததால்தான் அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்ட தங்கசாமியின் உறவினர்கள், புளியங்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஆட்கள் பற்றாக்குறையினால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவியது. மேலும், புளியங்குடி பேருந்து நிலையம் எதிரே உறவினர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Kanyakumari: காசிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை; கன்னியாகுமரி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஏற்கனவே, நேற்று (ஜூன் 14) காலை தென்காசி விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தபோது, நகராட்சி அலுவலகத்திற்கு வந்த மர்ம நபர்கள் அலுவலக வாயில் முன்பு வைத்து ராஜேஷை சரமாரியாக வெட்டிய நிலையில், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

அதன் பின்னர், அங்கு இருந்தவர்கள் உயிரிழந்த ராஜேஷின் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, ராஜேஷின் உறவினர்கள் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்த நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இவ்வாறு தென்காசியில் அடுத்தடுத்த நிகழ்ந்த குற்றச் சம்பவங்களால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் படிங்க: Tenkasi Murder CCTV: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை; பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.