தென்காசி மாவட்டம் புளியரை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரியை மறித்து காவல்துறையினர் சோதனை நடத்தினர். 380 ரேஷன் அரிசி மூடைகள் கடத்தப்டுவது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக காவல்துறையினர், ஓட்டுநரிடம் விசாரணை செய்ததில் அவர் பெயர் சௌந்தர்ராஜன் என்பதும் அவர் வாடிக்கையாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து அரிசி ஏற்றிச் கேரளாவிற்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் லாரியையும், ஓட்டுநரையும் நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதேப்போன்று கடந்த வாரம் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கு கடத்தி சென்ற ரேஷன் அரிசியை கேரள காவல்துறையினர் ஆரியங்காவு பகுதியில் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.