ETV Bharat / state

தொடர் சாரல் மழை; தென்காசியில் பொங்கல் விற்பனை மந்தம்!

தென்காசி: தொடர் சாரல் மழையின் காரணமாக கரும்பு, மஞ்சள், பனகிழங்கு உள்ளிட்டவற்றின் விற்பனை மந்தகதியில் நடைபெறுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Jan 13, 2021, 4:50 AM IST

தென்காசி
தென்காசி

தை 1ஆம் தேதி, தமிழர்களின் உழவர் திருநாளான பொங்கல் திருவிழா தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாலையோரத்தில் பொங்கல் பானைகள், கரும்பு, பனகிழங்கு, மற்றும் மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனைகளில் பெரும்பாலான வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு கரும்பு கட்டானது 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைக்கும், மஞ்சள் 20 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கும், பனகிழங்கு ஒருகட்டு 70 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் இடைவிடாது தொடர் சாரல் மழையின் காரணமாக பொங்கல் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்காசியில் பொங்கல் விற்பனை மந்தம்

இதுகுறித்து கரும்பு வியாபாரி கூறுகையில், "மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கரும்புகளை கொண்டு வந்து விற்பனை செய்யதோம். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் வருகை குறைவாக உள்ளது.

இன்னும் பொங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது. இன்று மழை நீடிக்குமேயானல் இந்த வருட விற்பனை முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை உருவாகும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.