ETV Bharat / state

சிட்டிசன் பட பாணியில் ஊர் பெயரை காப்பாற்ற போராடும் மக்கள்.. தென்காசியில் நடப்பது என்ன? - சந்தனகுமார்பட்டி

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தனகுமார்பட்டியில் வைக்கப்பட்ட ஊர் பலகையை அகற்றகோரி பொதுமக்கள் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

santhanakumarpatti
சந்தனகுமார்பட்டி
author img

By

Published : Jul 21, 2023, 3:28 PM IST

ஊர் பெயரை காப்பாற்ற போராடும் கிராம மக்கள்

தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்டது மாடியனூர் மற்றும் சந்தனகுமார்பட்டி கிராமங்கள். இதில் சந்தனகுமார்பட்டி பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தனகுமார்பட்டி ஊர் பகுதியில் மாடியனூர் என்று பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இதன் விளைவாக கடந்த 2016 ஆம் ஆண்டு வருவாய் துறை மூலம் இரு தரப்பினரையும் அழைத்துச் பேசி பெயர் பலகையை அரசு அனுமதி இல்லாமல் வைக்க கூடாது என்று சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், மாடியனூரைச் சேர்ந்த ஒருவர் சந்தனகுமார்பட்டியில் இ-சேவை மையம் ஒன்றை அமைத்துள்ளார். அதில் மாடியனூர் என்று முகவரியில் தகவல் பலகை வைத்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நிறைவு: காணிக்கையை வாரி வழங்கிய பக்தர்கள்!

மேலும், இது சம்பந்தமாக மீண்டும் கடந்த 27ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து பேசியதில் பெயர் பலகையை எடுக்க ஜூலை 1ம் தேதி வரை அவகாசம் கூடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் பெயர் பலகையை எடுக்கவில்லை. இதற்கு அப்பகுதி மக்கள் இது தொடர்பாக பலமுறை அரசு துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களிடன் இரத்த மாதிரி சேகரிப்பு... விசாரணை நிலை என்ன?

இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் போலீசார் அவர்களிடம் பேச்சிவார்த்தை நடத்தினர். எனினும் தாசில்தார் வந்து சரியான தகவல் கொடுத்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர். அதன் பின்பு வந்த தென்காசி தாசிதார் சுப்பையன், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி உள்ளிட்ட அதிகார்கள் நேரில் பார்வையிட்டு 25 நாட்களுக்குள் பெயர் பலகை தொடர்பான பிரச்னைக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கூறிய பின்னர் கிராம பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் போடப்பட்டது ? - விளக்கம் அளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.