தை, ஆடி, புரட்டாசி ஆகிய அமாவாசை தினங்களில் நீர்நிலைகளில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மக்களின் வழக்கம். அதன்படி, தை அமாவாசை தினமான இன்று (பிப்.11) தமிழ்நாட்டில் பிரதான நீர்நிலைகளில் பொதுமக்கள் தங்களது மறைந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள பிரதான நீர்நிலையான குற்றால அருவிகளில் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க இன்று (பிப். 11) அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் அருவிகளில் நீராடிவிட்டு, அருவி கரைகளில் இருந்த புரோகிதர்களிடம் தங்களின் மூதாதையர்கள் பெயர்களை சொல்லி அருவிகளிலிருந்து வழிந்தோடும் தண்ணீரில் எள்ளும், நீரும் ஊற்றி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதையும் படிங்க: குமரி; மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் அளித்த மக்கள்!