ETV Bharat / state

சங்கரன்கோவில் ஆடிதபசு விழா: பொதுமக்களுக்கு அனுமதி இல்லை - Aadithapasu festival

சங்கரநாராயணசாமி கோயிலில் வெள்ளிக்கிழமை ஆடிதபசு விழா நடைபெறும் நிலையில் கரோனா காரணாமாக பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆடிதபசு விழா
ஆடிதபசு விழா
author img

By

Published : Jul 22, 2021, 1:35 PM IST

தென்காசி: சங்கரன்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடிதபசு விழா ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது. நாளை (ஜூலை 23) கோயிலில் ஆடித்தபசு விழா நடைபெற உள்ள நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனவும், மண்டகபடி பூஜைதார்கள் மட்டும் அடையாள சீட்டுடன் அனுமதிக்கபடுவர் என மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற சங்கரநாராயணசாமி திருக்கோயில்

மேலும் ஆடிதபசு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, யூ-ட்யூப் வாயிலாக நேரலையாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோயிலுக்கு வருவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணியிலிருந்து விடுவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.