தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் பரவல் காரணமாக பலகட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மகாளய அமாவாசை நாளான இன்று(செப் 17) பொது இடங்களில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
மகாளய அமாவாசை நாளான இன்று(செப் 17) குற்றால அருவிகளில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களை வணங்கி திதி கொடுத்து புனித நீராடிச் செல்வது வழக்கம். இதனிடையே தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தருமபுரி
பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மகாளய அமாவாசையான இன்று(செப் 17) சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கரூர்
நெரூர் காவிரி ஆறு, திருமுக்கூடல், மாயனூர் காவிரி ஆறு போன்ற இடங்களில் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து காவிரி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பொதுமக்கள் செய்து வழிபட்டனர் .