ETV Bharat / state

தென்காசி குற்றால அருவிகளில் குளிக்க நாளை முதல் அனுமதி -  மாவட்ட நிர்வாகம் - Permission allowed in Tenkasi Courtallam

தென்காசி: பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க நாளை (டிசம்பர் 15) முதல் அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tenkasi Courtallam falls
Tenkasi Courtallam falls
author img

By

Published : Dec 14, 2020, 4:55 PM IST

தென் மாவட்டத்தில் பிரதான சுற்றுலாத் தலமான குற்றால அருவிகள், தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது. குற்றால அருவிகளைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களில் சீசன் களைகட்டும். இந்த சீசனில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழ்நாடு அரசு கரோனா தடை உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றால அருவிகள் மட்டும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு வந்தது. குற்றாலத்தை திறக்கக்கோரி வியாபாரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், இன்று (டிசம்பர்-14) குற்றால அருவிகளான பிரதானம் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு நாளை முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் முகக் கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாட்டு விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றவேண்டும்.

ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண், பெண் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்களோ, அதனடிப்படையில் குளிக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அருவிகளுக்கு வருவதைத் தவிர்க்க வேண்டுமெனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.