தென்காசியில் பன்றிகள் கடித்து ஒருவர் பலி! - தென்காசியில் பன்றிகள் கடித்து ஒருவர் பலி
தென்காசி ஆய்க்குடி அருகே பன்றிகள் கடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி: ஆய்க்குடி அருகே உள்ள கம்பளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிசாமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பணிக்கு சென்ற மணிசாமி, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள், அவரை தேடிச் சென்றுள்ளனர்.
அப்போது முப்புதரில் மணிசாமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளதை கண்ட அவரது உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் உடற்கூராய்வில் அவர், பன்றிகள் கடித்ததில் உயிரிழந்ததாக தெரியவந்தது. மணிசாமிக்கு ஒரு மாத கைக்குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
பன்றிகள் கடித்து ஒருவர் உயிரிழந்தது, அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பீகாரில் உணவில் விஷம் கலப்பு.. 150 பேருக்கு உடல்நலக்குறைவு!