ETV Bharat / state

பரிசோதனை செய்யவில்லை ஆனாலும் பாசிட்டிவ்: அதிர்ச்சி கிளப்பிய அறிவிப்பு - corona positive

தென்காசி: தென்காசி அருகே விருப்ப ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இறந்து 8 மாதங்களுக்கு பிறகு, கரோனா பரிசோதனைக்கான பதில் அறிக்கையும் வந்திருப்பதுடன், சென்னையில் இருக்கும் அவரது மருமகள் பரிசோதனையே செய்யாத நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு என வந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃப்டச்
ஃப்ட்ச
author img

By

Published : Apr 22, 2021, 2:40 AM IST

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உயிரிழந்தார்.

8 மாதங்களுக்கு முன்பே உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தோணிராஜ் கடந்த 18ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்ததாகவும் அதற்கு மறுநாள் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்திற்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சென்னையில் வசிக்கும் அந்தோணிராஜின் மகன் வினோத்தின் மனைவி ஜென்சிக்கு கரோனா பரிசோதனை செய்யாத நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தால் தகவல் வந்துள்ளது.

அந்தோணிராஜுக்கும், அவரது மருமகளுக்கும் கரோனா சோதனை செய்யாமலேயே பதில் அறிக்கை வந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.