மகாத்மா காந்தி நினைவு தினமான கடந்த ஜனவரி 30ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டத்தில் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை தொழு நோயாளர்களுக்கான தடுப்பு முகாம், தோல் நோய் முகாம் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
தொடந்து, தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று (பிப்.4) கல்லூரி மாணவிகள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் நோயாளிகளுக்கு சிறப்பு காலணி, மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் 70 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது 40 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
சிகிச்சையில் இருக்கும் தொழுநோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மூலம் மாத உதவித் தொகை 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழுநோய் மருத்துவப் பணி துணை இயக்குநர் மருத்துவர் ஆஷா, இணை இயக்குநர் நெடுமாறன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:சசிகலா வருகை திடீர் மாற்றம்!