நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). இவருக்கு மனைவி கீதா (26), அஜய், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தென்காசி மாவட்டம் கடையம் காவல் சரகத்தின் கீழ் உள்ள, ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அய்யப்பன் இன்று வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அய்யப்பன் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக்கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி மற்றும் ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் சென்று உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அவரது மனைவி கொடுத்தப் புகாரின் பேரில், கடையம் காவல் ஆய்வாளர் ஆதிலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.