தென்காசி: பனவடலிசத்திரம் அருகேயுள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்தவர் திருமலைக்குமார். இவர் ஜேசிபி ஓட்டுநராக வேலைசெய்தார்.
இந்நிலையில் அவர் ஊர் அருகேயுள்ள கிணற்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த பனவடலிசத்திரம் காவல் துறையினர், அவரது உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, திருமலைக்குமார் உயிரிழப்பிற்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யக் கோரி கிராம மக்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: வங்கி ஊழியர் போல நடித்து முதியவர்களிடம் ரூ.4 கோடி மோசடி செய்தவர் கைது!