ETV Bharat / state

குடும்ப தகராறு- குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் - தென்காசி கிரைம் செய்திகள்

தென்காசி: கடையம் அருகே குடும்ப பிரச்னை காரணமாக தாய் தனது இரண்டு பிள்ளைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாய்
தாய்
author img

By

Published : Jul 13, 2021, 9:59 PM IST

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்துள்ள செக்கடியூர் நடு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கௌரி கனகாவுக்கும் (30) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 5 வயதில் 1 மகனும், 3 வயதில் 1 மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறு இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் இருந்த கௌரி இன்று (ஜூலை 13) வீட்டில் யாரும் இல்லாதபோது தனது இரண்டு பிள்ளைகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குளம் காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். குழந்தைகளுடன் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெற்ற மகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் தந்தை தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.