தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திரு நீலக கண்ட ஊரணி பகுதியில் எட்டு லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை, பூங்காவை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்தார்.
அதேபோல, சங்கரநாராயணசாமி திருக்கோயிலுக்கு பத்தர்கள் நடந்து செல்ல கோயில் வாசல் அருகே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் கல் பதிக்கும் பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.