தென்காசி: 50 லட்சம் வரை சுயத்தொழில் தொடங்கிடவும், 2014ல் இருந்து 2021 ஆம் நிதியாண்டு வரை திவ்யாஞ்சன் உரிமை பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக 2000 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆயக்குடியில் உள்ள தனியார் மாற்றுத்திறனாளிகள் சேவா நிறுவனமான, அமர்சேவா சங்கத்தின் சூரிய ஒளி மூலம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய ஒளி மின்விளக்கு வசதிகள் கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (அக்.22) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, திட்டங்களை திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து, மேடையில் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளுக்கு 50 லட்சம் வரை சுயத்தொழில் தொடங்கிடவும், வாழ்க்கையில் மேம்பட வேண்டுமென்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகும் கூறினார். மேலும், 2014 - 2021 ஆம் நிதி ஆண்டில், திவ்யாஞ்சன் உரிமை பிரிவில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு மூலம் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்பூரில் களைகட்டும் நவராத்திரி திருவிழா.. வித விதமாய் கொலு வைத்து சிறப்பு வழிபாடு!
தொடர்ந்து பேசிய அவர், பத்மஸ்ரீ விருதுகள் மக்கள் விருதாக தற்போது வழங்கப்பட்டு வருவதாவும், சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு வழங்குவதில் பாரத பிரதமர் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
-
இன்று ஒரு மன நிறைவான நாள்...!
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 22, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
சிறப்புத்திறனுடையவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும், என் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமர் சேவா சங்க தொண்டு நிறுவனம் திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி திட்டத்தை,… pic.twitter.com/K0fByyzgsd
">இன்று ஒரு மன நிறைவான நாள்...!
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 22, 2023
சிறப்புத்திறனுடையவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும், என் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமர் சேவா சங்க தொண்டு நிறுவனம் திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி திட்டத்தை,… pic.twitter.com/K0fByyzgsdஇன்று ஒரு மன நிறைவான நாள்...!
— Dr.L.Murugan (@Murugan_MoS) October 22, 2023
சிறப்புத்திறனுடையவர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும், என் மனதில் எப்போதும் நீங்கா இடம் பிடித்திருக்கும் அமர் சேவா சங்க தொண்டு நிறுவனம் திருநெல்வேலி மாவட்டம் ஆய்க்குடி கிராமத்தில் - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி திட்டத்தை,… pic.twitter.com/K0fByyzgsd
மேலும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு அமர் சேவா சங்க அறக்கட்டளையின் சேவையை பாராட்டி, அதன் தலைவர் திரு. ராமகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.
சிறப்புத்திறன் உடையவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு திறன் இருக்கிறது என்பதை அவர்களுடன் பேசும்பொழுதும், அவர்களுடன் நேரம் செலவழிக்கும் பொழுது உணர்ந்தேன். இந்த நேரம் வாழ்வின் பொன்னான நேரம் என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை தான் திமுகவுக்கு திரும்பம் தந்தது.. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!