ETV Bharat / state

மின் தடையை பயன்படுத்தி ஒருவர் வெட்டிக்கொலை! உறவினர்கள் போராட்டத்தால் போலீஸ் பாதுகாப்பு - கடையநல்லூரில் நிலப்பிரச்னையால் ஒருவர் வெட்டிக்கொலை

தென்காசி: கடையநல்லூர் அருகே நிலப்பிரச்னை காரணமாக மின் தடையை பயன்படுத்தி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man stabbed in power cut time due to land issue in kadaiyanallur
மின் தடையை பயன்படுத்தி ஒருவர் வெட்டிக்கொலை
author img

By

Published : Jul 31, 2020, 8:12 AM IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை(55). இவர் தனது வீட்டுக்கு அருகில் மாட்டு தொழுவம் வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாக உள்ளது. அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்தார்.

இதையடுத்து அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) என்பவருக்கும் சொந்தமாக திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளது. செல்லத்துரை இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய, கொல்லி மாடசாமி பல்வேறு முயற்சி மேற்கொண்டு வந்ததாகவும், ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லி மாடசாமி, நிலம் தொடர்பாக செல்லத்துரையிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்லத்துரை வழக்கம்போல் வீட்டுக்கு எதிரில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு உணவை வைத்துவிட்டு நேற்று (ஜூலை 30) இரவு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளார்.

அப்போது அந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொல்லி மாடசாமி உள்ளிட்ட சிலர், செல்லத்துரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உறவினர்கள் வந்து பார்த்தபோது செல்லத்துரை ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தனர். அப்போது குற்றவாளிகளை கைது செய்யும்வரை உடலை எடுக்கப்போவதில்லை என செல்லத்துரையின் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மின் தடையை பயன்படுத்தி ஒருவர் வெட்டிக்கொலை

மேலும், செல்லத்துரை உறவினர்கள் கொல்லி மாடசாமியின் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர், கடையநல்லூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து செல்லத்துரை உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செல்லத்துரை மற்றும் கொல்ல மாடசாமி ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சொத்து தகராறில் விவசாயி அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.