கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே மாதம் 3ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. ஊரடங்கு காரணமாக நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் பெரும்பாலும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஆனால், ஒரு சிலரோ திருமணத்தை ரத்துசெய்ய மனமில்லாமல் எளிமையான முறையில் நடத்திமுடிக்கின்றனர்.
அதன்படி, நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள முருகன் கோயிலில் பெண் வீட்டார் தரப்பில் 10 பேர், மணமகன் வீட்டார் தரப்பில் 10 பேர் என குறைந்த எண்ணிக்கையிலேயே உறவினர்கள் கலந்துகொண்டு, திருமணத்தை எளிமையான முறையில் நடத்தினர்.
இன்று ஒரேநாளில் மூன்று திருமணங்கள் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எளிமையாக நடந்துமுடிந்தன. இதில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மணமக்கள் விக்னேஷ்-உமாமகேஸ்வரி இருவரும் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் முகக்கவசம் அணிந்துகொண்டனர்.
மேலும் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் திருமண வீட்டார் சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. விழிப்புணர்வை ஏற்படுத்த திருமண வீட்டாரின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டினர்.
இதையும் படிங்க: பேய் போல வேடமணிந்து கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நபர்!