தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் விக்ரமசிங்கபுரம், வேம்பையாபுரம், செட்டிமேடு உள்ளிட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து நாய், ஆடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை, கடித்துக் கொன்று விட்டு, மீண்டும் காட்டுக்குள் சென்று விடும்.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்தனர். இந்த நிலையில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூண்டு ஒன்றை வைத்து, வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இரவு வனத்துறையினரின் கூண்டிற்குள் சிறுத்தை சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிறுத்தையைக் கூண்டோடு, வனத்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வனப்பகுதியில் விட்டனர்.
மேலும் சிறுத்தை பிடிபட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதே பகுதியில் கடந்த 50 நாள்களில் ஆறு சிறுத்தைகள் பிடிபட்டதால், இது ஒரு தொடர்கதையாகியுள்ளது. எனவே, இந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானல் நகர்ப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - பீதியில் மக்கள்