ETV Bharat / state

தென்காசியில் மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் கூலித்தொழிலாளி - அறுவை சிகிச்சை

தென்காசி அருகே 14 வயது மகனின் மாற்று இருதய அறுவை சிகிச்சைக்காக பண வசதி இல்லாமல் தவிக்கும் பெற்றோர், முதலமைச்சரிடம் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் கூலித்தொழிலாளி

author img

By

Published : Jan 6, 2023, 10:15 AM IST

தென்காசி மாவட்டம் கடையம் அருகே சம்பன்குளம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகன் - முத்துலட்சுமி தம்பதி. இவர்களுக்கு சரவணன் (14), சக்திவேல் (12) என இரண்டு மகன்களும், முத்துமாரி (8) என்ற மகளும் உள்ளனர். முருகன் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகன் சரவணனுக்கு சிறு வயதிலுருந்து இருதய கோளாறு இருந்துவருகிறது. 2010ஆம் ஆண்டு சரவணனின் இருதயத்தில் ஓட்டை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

ஆனால், இப்போது சரவணனுக்கு மாற்று இருதயம் பொறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவிக்கும் கூலி தொழிலாளியான முருகன், தனது மகனின் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அறுவை சிகிச்சையே தனது வருமானத்தை மீறி சுமார் 10 லட்சம் வரை செலவு செய்த முருகன், அறுவை சிகிச்சைக்குப் பின் மாதம் ரூ.6 முதல் 8 ஆயிரம் வரை மருத்துவ செலவு செய்து தனது மகனை காப்பாற்றி வருகிறார்.

மகனின் இருதய அறுவை சிகிச்சைக்காக போராடும் கூலித்தொழிலாளி
தர்மபுரமட ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் சரவணனுக்கு மாத்திரை வழங்கினார்

இந்த நிலையில் மாற்று அறுவை சிகிச்சைக்கு வழி இல்லாமல் பரிதவித்து வருகிறார். இதனால் தனது மகனின் உயிரை காப்பாற்றுமாறு, தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தர்மபுரமட ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம் முருகன் இல்லத்திற்கு சென்று மாத்திரைகளை வழங்கினார்.

இதுகுறித்து சரவணனின் தாய் முத்துலட்சுமி கூறுகையில், “நன்றாக படிக்கும் தனது மகன் இருதய நோயால் அவதிப்பட்டு வருவதால், பள்ளிக்க செல்ல இயலவில்லை. திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பெற்று வருகிறார். மாற்று இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறுவை சிகிச்சைக்குக சுமார் ரூ 15 லட்சம் வரை தேவைப்படுகிறது. எங்களிடம் இருந்த நிலத்தை விற்று மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறோம். தொடர்ந்து எங்களது வீடும் அடமானத்தில் உள்ளது. மேலும் மேல் சிகிச்சை செய்வதற்கு எங்களால் முடியவில்லை. எனவே தமிழக முதலமைச்சர் எங்கள் மகனை காப்பாற்ற மருத்துவ உதவி மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: மாஞ்சா நூலில் சிக்கி உயிருக்கு போராடிய காகம் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.